பப்பாளியால் பளபளப்பாகும் சருமம்!
பப்பாளி என்சைம்களால் நிரம்பியிருப்பதால் சருமத்தில் இறந்த செல்களை எளிதில் நீக்கிவிடும்.
இதில் உள்ள பண்புகள் சருமத்தை பளபளப்பாக மாற்றவும், தழும்புகள், சன் டான் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது.
சரும முதிர்வை தடுத்து, வயதான தோற்றத்தைக் காட்டும் சுருக்கங்களை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
இந்த பருவக்காலத்தில் குளிர்ந்த சூழல் இருப்பதால் சருமம் வறண்டு காணப்படும். இப்படி வறண்ட சருமம் கொண்டோருக்கு பப்பாளி உதவும்.
பப்பாளியை அரைத்து வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி வர சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். பேசியல் செய்தது போல பொலிவுடன் தோற்றமளிக்கும்.
சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருப்பவர்களும் இந்த பப்பாளியை முகத்தில் தேய்த்தால் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை நீக்கி ஜொலிப்பை தரும்.
பப்பாளியை கண்களுக்கு கீழ் அப்ளை செய்வதால் கருவளையத்தை இயற்கையான முறையில் போக்கலாம்.