நம்மிடமே இருக்கு மருந்து... ஸ்ட்ராபெரியின் ஆரோக்கிய நன்மைகள்
செம்புற்றுப் பழங்கள் எனப்படும், இந்த சாறு நிறைந்த, கவர்ச்சியான அடர்சிகப்பு நிறம் நிறைந்த இந்த ஸ்ட்ராபெரி பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது.
இதில் வைட்டமின், சி, ஏ மற்றும் கே, நியாசின், போலிக் அமிலம், மாங்கனீஸ், அயோடின், செலினியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
பார்வை திறனை அதிகரித்து, பிற்காலத்தில் கண் மங்குதலை முற்றிலும் தவிர்க்க உதவுகிறது.
வயது முதிர்ச்சியால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோலிலுள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, பளபளக்கும் சருமத்தை அளிக்கக்கூடும்.
அவ்வப்போது இதை சாப்பிட இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கும்.
உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாத்து, உடல் எடையை குறைக்க உதவும்
புற்றுநோய் எதிர்பாற்றலை அதிகரித்து, அந்நோய் வராமல் தடுக்க உதவுகிறது.