அடினாய்டு சதை குறித்த சில தகவல்கள்...
அடினாய்டு என்பது மூக்கின் பின்புறமுள்ள சதை. அதை பாரம்பரிய முறையில் அறுவை சிகிச்சை செய்த பின்னும் சிறிதளவு உட்பகுதியில் ஒட்டியிருக்கும்.
அந்த குழந்தைக்கு மீண்டும் அலர்ஜி, தொற்று ஏற்பட்டால் மீதமுள்ள அடினாய்டு சதை பெரிதாகி விடும். அதனால் மறுபடியும் குறட்டை தொந்தரவு வரலாம்.
அலர்ஜி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு பின், அலர்ஜிக்கான மருந்தை ஸ்பிரே செய்ய வேண்டும். குழந்தைக்கு சொத்தைப்பல் இருந்தாலும் அதை சரிசெய்ய வேண்டும்.
தொற்று வராமல் பராமரிப்பது அவசியம். இவ்வளவு நாள் மூக்கினால் மூச்சுவிடாமல் வாயினால் மூச்சுவிட பழகியிருப்பர். அதனால் வாயைத் திறந்தே மூச்சுவிடுவர்.
அறுவை சிகிச்சை செய்த சில நாட்கள் கழித்து துாங்கும் போது வாயை மூடிவிட பழக வேண்டும். அதன் பின் மூக்கினால் மூச்சுவிட பழகுவர்.
உங்கள் குழந்தையின் வாயை மூடிவிட வேண்டியுள்ளது என்றால் அடினாய்டு பெரிதாக இல்லை என்று அர்த்தம். எனவே கவலைப்படாமல் கவனமாக வாயை மூடிவிட வேண்டும்.
அடினாய்டு மீண்டும் பெரிதாக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அடினாய்டு பெரிதாக இருந்தால் 'காப்லைட்டர்' கருவி மூலம் துல்லியமாக அகற்ற முடியும்.