உடலில் வாயு ஏற்பட என்ன காரணம்?
வாயு உருவாவதற்கான காரணங்களில் ஒன்று, கார்போஹைட்ரேட் உணவுகளில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை தான்.
இவை மட்டுமல்ல, சர்க்கரை ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் நம் உடலில் வாயுவை ஏற்படுத்தும்.
எனவே, செரிமானதிற்குக் கடினமாக இருக்கும் உணவுகள் தான் உடலில் வாயு ஏற்பட முக்கியக் காரணமாக திகழ்கிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால், கவலைப்பட தேவையில்லை.
வாயுவினால் வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்து கொண்டால் டாக்டரை அணுகலாம்.
மேலும் மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பை கற்கள் ஆகியனவும், வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.