நல்ல ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு உங்களை சாதாரண நோய்கள் மற்றும் ஆபத்தான வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்கும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் முயற்சியை காலை உணவுடன் துவங்கலாம்.
நேரமின்மை போன்ற காரணத்தால் உணவை தவிர்க்க வேண்டாம்.
மஞ்சளில் உள்ள குர்குமின் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பால், ஸ்மூத்திகள் போன்ற உங்கள் காலை பானங்களில் மஞ்சளைச் சேர்க்கலாம்.
தேநீரில் இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து மசாலா தேநீராக எடுத்து கொள்ளுங்கள்.
பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் நல்ல கொழுப்பு வகைகளை சார்ந்தது. அதேபோல் வெள்ளரி, புசணி விதைகளும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
காலையில் திட உணவை தவிர்ப்பவர்கள் தயிர், பால் கலந்து, அதில் சர்க்கரைக்குப் பதிலாக பழங்கள், நட்ஸ், தேன் சேர்த்து ஆரோக்கியமான ஸ்மூத்திகளை சாப்பிடலாம்.
பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் முட்டை, சோயா, பன்னீர், பருப்பு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவை தேர்வு செய்யலாம்.