பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஹெல்த்தியான 6 ஸ்நாக்ஸ்கள் !

உலர் பழங்கள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதிலுள்ள ஒமேகா 3 மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.

சிறுதானியம் அல்லது சத்துமாவு லட்டுகளை 2 வாரம் வரை இருப்பு வைக்கலாம். காலையில் பிரேக் பாஸ்ட் சாப்பிடாத நிலையில், இந்த லட்டிலுள்ள சத்துகள் சமன் செய்யக்கூடும்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் அல்லது மசாலா பொரியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள் உள்ளன. எடைக்குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இது சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கக்கூடும்.

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரி மற்றும் எள் உருண்டைகளை வாரம் ஒரு முறை கட்டாயமாக சாப்பிட வேண்டும். செலினியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

அவுலில் செய்த மிக்சரை தரும் போது, அதிலுள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

டிரை ப்ரூட் லட்டு... உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் மெக்னீசியம், கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளின் நரம்பு, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.