வாழ்நாளில் 19.5 நிமிடங்களை குறைக்கும் ஒரு சிகரெட்
ஒருவர் ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும்போதும் தன் வாழ்நாளில் 11 நிமிடங்கள் குறைவதாக பழைய ஆய்வுகளில் கூறப்பட்டன.
தற்போது லண்டன் பல்கலையின் புதிய ஆய்வின் படி, ஒரு சிகரெட் புகைப்பதன் மூலம் சராசரியாக 19.5 நிமிடங்கள் ஆயுட்காலம் குறைகிறது. ஒரு பாக்கெட் புகைப்பவர் வாழ்நாளில் 7 மணி நேரத்தை இழக்கிறார்.
ஒரு சிகரெட் புகைப்பதால் ஆண்களின் வாழ்நாளில் 17 நிமிடங்களும், பெண்களுக்கு 22 நிமிடங்களும் குறைகின்றன.
ஒரு நாளில் 10 முறை சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால் ஒரு வாரத்திலுள்ள 7 நாட்களில் ஒரு முழு நாளை சேமிக்கலாம். ஒரு ஆண்டுக்கு 50 நாளை சேமிக்கலாம்.
அதேவேளையில் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால் இழந்த காலத்தை ஓரளவுக்கு மீட்டு விடலாம் என ஆய்வில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகைபிடிப்பதை நிறுத்தும்போது அவரின் வாழ்க்கை தரம் மேம்படுகிறது. மூச்சுத் திணறல் குறையக்கூடும். நுரையீரல் தொற்று பாதிப்பும் குறையும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் ஒரு பாக்கெட் வீதம் சிகரெட் புகைப்பவர்களாக இருப்பினும், நிறுத்தி விட்டால் உடலில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்
புகைப்பிடிப்பதை கைவிட்டால் முடிந்த வரை உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.