கோடைக்கு சில்லுன்னு ஒரு மேங்கோ லஸ்ஸி !

தேவையானப் பொருட்கள்: தயிர் - 125 மிலி, ஐஸ் வாட்டர் - 200 மிலி, மாம்பழம் - 1, சர்க்கரை தேவையானளவு, புதினா - 4 அல்லது 5 இலைகள்.

மாம்பழத்தை நன்றாக கழுவி சதைப்பகுதியை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அதனுடன், தயிர், சர்க்கரை, புதினா, ஐஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து மிக்சி ஜாரில் ஜூஸாக அரைக்கவும்.

இதை ஒரு டம்ளரில் ஊற்றி, இரண்டு ஐஸ்கட்டித் துண்டுகளை சேர்த்தால், இப்போது சுவையான, ஆரோக்கியமான மேங்கோ லஸ்ஸி ரெடி.

பொடியாக நறுக்கிய நொறுக்கிய பாதம், பிஸ்தாவை தூவியும், புதினா இலைகள் சேர்த்து பரிமாறலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இதை விரும்பிச் சாப்பிடுவர். லஸ்ஸி செய்யும் போது ஒரு சிட்டிகை கருப்பு அல்லது இளஞ்சிவப்பு உப்பு சேர்க்கலாம்.