வெயில் நேரத்தில் குழந்தைக்கு ஏசி போடலாமா?

உஷ்ணத்தின் தன்மையை நாம் எப்படி உணர்கிறோமோ அதைவிட இரு மடங்கு அதிகமாக குழந்தைகள் உணர்வர்.

எவ்வளவு அதிகமாக உஷ்ணம் இருந்தாலும் குழந்தையை ஏ.சி.,யில் வைத்திருக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் பரவலாக உள்ளது.

குழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏ.சி., வைத்திருப்பது தவறில்லை. நாம் ஏசியை உபயோகப்படுத்தும் பொழுது, அதன் வெப்பநிலை 26 முதல் 29 டிகிரி செலசியஸ் அளவு இருப்பது நல்லது.

இதற்குக் கீழே குறைக்கும் பொழுது, அறை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியடையும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது.

ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது.

அதனால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.

காற்றோட்டமான இடத்தில் குழந்தையை வைத்திருப்பது, பருத்தி துணிகளை அணிவிப்பது, ஒரு வயதிற்கு கீழ் இருந்தால், ஈரத் துணியால் உடம்பைத் துடைப்பது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.