கண்ணீல் நீர் வடிவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கண்களில் துாசி விழுந்தால் கண்ணீர் சுரந்து அதனை வெளியேற்றும். அதனால் அப்போது புகை வரும் இடங்கள், தூசி, மாசு இருக்கும் இடங்களுக்கு அருகே செல்ல வேண்டாம்.

கண்களில் எப்போதும் அழுக்குகள் தேங்காமல் வைத்திருக்க வேண்டும். கண்களில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசிகளை ஈரமான மென்மையான துணியை கொண்டு துடைத்து சுத்தமாக வைக்கவும்.

அடிக்கடி நீர் வடிந்தால் பார்வை குறைபாடு ஏற்படுவதின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் டாக்டரை பார்ப்பது அவசியம்.

40 வயதிற்கு மேல் நீர் வடிவது தொடர்ந்தால் கண் அழுத்த நோயாக இருக்கும். அதற்கான பரிசோதனை மேற்கொள்ளலாம்.

அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கு ஏற்ப கண் கண்ணாடி அணிந்து பணிபுரிந்தால் கண் சிவத்தல், கண்களில் நீர் வடிவதை தவிர்க்கலாம்.

கண்களில் நீர் வடிவதற்கு ஒவ்வாமையும் காரணமாக இருக்கலாம். ஒவ்வாமை மருந்துகள் கண்களில் இருந்து வழியும் நீர், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.