வழிநெடுக காட்டுமல்லி புகழ் பவானி ஸ்ரீ...

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி., பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ; இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்., ரஹ்மானின் சகோதரி மகளும் ஆவார்.

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படம் மற்றும் பாவக்கதைகள் வெப் சீரிஸ் போன்றவற்றில் ஏற்கனவே நடித்துள்ளார்.

தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதில் மலை வாழ் கிராமப் பெண்ணாக நடித்துள்ளார் பவானி ஸ்ரீ.

விடுதலை படத்தில் வரும் 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல் பயங்கர ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த பாடலை தான் பலரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைக்கின்றனர்.

இந்த ஒரே படத்தின் மூலம், பட்டித்தொட்டி எங்கும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பவானி ஸ்ரீ.

குறிப்பாக, வழிநெடுக காட்டுமல்லி... பாடலை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.