தமிழுக்கு வருகிறார் 'குண்டூர் காரம்' ஸ்ரீலீலா
2019ல் கன்னடத்தில் அறிமுகமானாலும், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா.
இவர் தற்போது எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்தது மூலமும், நடனத்தில் அசத்தியும் தனி கவனம் பெற்றார்.
அவரது நடனத்திற்காகவே படங்களில் வாய்ப்பு கொடுக்கப்படுவதாக பேச்சும் உள்ளது
பொங்கலுக்கு மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அவர் நடித்து வெளிவந்த 'குண்டூர் காரம்' மாஸ் ஹிட்டானது.
அதிலும் 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு அவரின் நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடனக் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தமிழில் சில புதிய படங்களில் நடிக்க உள்ளதாகவும், அவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ஸ்ரீலீலா அண்மையில் கூறினார்.
தெலுங்கில் பிரபலமாகி தமிழுக்கு வந்து ஹிட் அடித்த கதாநாயகிகளின் வரிசையில் ஸ்ரீலீலாவும் இடம் பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.