ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் ரெசிபி இதோ!

அடை பிரதமன் என்பது கேரளாவில் திருவிழாக்கள் மற்றும் விசேஷ சமயங்களில் வழங்கப்படும் ஒரு பிரபலமான இனிப்பு ஆகும்.

இந்த ஓணன் பண்டிகையை முன்னிட்டு நம் வீடுகளில் இவற்றை செய்து அனைவரையும் அசத்தலாம். அதை செய்வதற்கான ரெசிபி இதோ…

தேவையானவை: பச்சரிசி - ஒரு சுப், வெல்லம் - 150 கிராம், ஜவ்வரிசி 25 கிராம், தேங்காய் - ஒன்று, முந்திரி, திராட்சை தலா 10, ஏலப்பொடி - அரை தேக்கரண்டி, நெய்- தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து மையாக அரைக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, பச்சரிசி மாவை மெல்லிய அடையாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்க விட்டு வடிகட்டவும்.

அடிகனமான பாத்திரத்தில் அடை துண்டுகளுடன், ஜவ்வரிசி, வெல்லக் கரைசல், தேங்காய்ப் பால், சிறிது நெய் சேர்த்து கொதிக்க விடவும்.

கீழே இறக்கி, ஏலப்பொடியையும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும்