வலிநிவாரணி மருந்துகள் கேட்பவர்கள் விபரத்தை தெரிவிக்க அறிவுரை

மருத்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல், மயக்க மருந்து, வலி நிவாரணி மருந்துகளை கேட்பவர்கள் விபரத்தை, போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற தடைச்செய்யப்பட்ட போதைப் பொருள்கள், கூரியர் வாயிலாக வருகிறதா என கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போதைப் பொருள்கள் குறித்து கண்காணிக்க கூரியர் கடை உரிமையாளர்களிடம் கூரியர் கடைகளுக்கு வரும் பொருட்களை ஸ்கேன் செய்து தான், கூரியர் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், மயக்க மருந்து, வலி மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் மருத்துவர் பரிந்துரை இன்றி கொடுக்கக்கூடாது.

மருத்துகளின் இருப்பு தொடர்பாக மருந்துக்கடைகளில் ரிஜிஸ்டர் சரியாக பராமரிப்பு செய்ய வேண்டும்.

அதே போல் மருந்துக்கடை உரிமையாளர்களிடம், மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்துகள் கொடுக்கக்கூடாது.

மேலும் மருந்துக்கடைகளில் போலீசார் அவ்வப்போது வந்து சோதனை செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.