ஆயுளை பலமாக்கும் பளுதுாக்குதல்
பளுதுாக்குதல் பயிற்சியில் ஈடுபடுபவர்களின் ஆயுட்காலம் குறித்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஆய்வு மேற்கொண்டது.
இதற்காக, அந்நாட்டில் 1.47 லட்சம் பேர், 30 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.
இதில், வாரத்துக்கு 90 - 120 நிமிடங்கள், தசைகளை வலிமைப்படுத்தும் பளுதுாக்குதல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுட்காலம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வாரத்துக்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள் எந்த காரணத்துக்காகவும் உயிரிழக்கும் வாய்ப்பு 13 சதவீதம் குறைந்தது.
இதே இதய பாதிப்பு எனில் 29 சதவீதம் என இருந்தது.
ஆனால், எடை துாக்கும் பயிற்சி எடுத்தவர்கள், எந்த காரணத்துக்காகவும் உயிரிழக்கும் வாய்ப்பு 27 சதவீதம் குறைந்தது என கண்டறிந்தனர்.