பேஷன் டிசைனர்களின் பணியை எளிதாக்கும் 'ஐடா' ஏஐ பேஷன் அசிஸ்டன்ட்..!
ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான ஏஐ பேஷன் ஷோக்கள் தற்போது சீனா, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பிரபலமடைந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது 'பேஷன் எக்ஸ்' என்கிற ஏஐ பேஷன் விழா ஹாங்காங் நாட்டில் நடந்தது.
அதில், 14 ஆடை வடிவமைப்பாளர்களின் 80 பேஷன் ஆடைகள் ஐடா (AiDA) என்கிற ஏஐ டிசைன் அசிஸ்டண்ட் உதவியுடன் டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாகும் பேஷன் ஆடைகள், தற்போது உலகம் முழுக்க பிரபலமடைந்து வருகின்றன.
வெர்ச்சுவல் பேஷன் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பேஷன் ஷோக்கள், பேஷன் துறையில் ஆங்காங்கே பல நாடுகளில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
மாடல்கள் இதில் பங்கேற்க நாடுவிட்டு நாடு பயணிக்க வேண்டியதில்லை. இருக்கும் இடத்தில் இருந்தே பங்கேற்க முடியும்; பல புதிய சாதனைகளும் படைக்க வாய்ப்புள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலமாக வித்யாசமான பேஷன் ஆடைகளை குறுகிய காலத்தில் புளூபிரிண்ட் எடுக்க முடியும்.
இதற்கு டிஜிட்டல் உரிமமும் பெறலாம். ஆன்லைனில் வாடிக்கையாளருக்கும் விற்கலாம்.
இதனால், பேஷன் ஷாப்பிங் பிரியர்கள் விதவிதமான உடைகளை அதிகளவில் எளிதாக தேர்வு செய்து வாங்க முடியும்.
மேலும், பேஷன் துறையில் டெய்லர்கள், மாடல்கள் உட்பட பலருக்கும் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பு பெருகக்கூடும்.