மெட் காலாவில் ஆலியா பட்டின் அசத்தல் லுக்ஸ் !

அமெரிக்காவில் நடக்கும் மெட் காலா 2024 பேஷன் ஷோவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாடல்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், பிரபலங்கள் பலரும் விதவிதமான உடையை அணிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்தாண்டில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் பங்கேற்காத நிலையில், ஆலியா பட் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார்.

இந்தாண்டின் கருப்பொருள் 'தி கார்டன் ஆஃப் டைம்' (The Garden of Time) என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, ஆலியா அணிந்திருந்த புடவை கண்ணாடி மற்றும் ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி, கைகளாலான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த பூக்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 1,965 மணி நேரங்களில், 163 பேரின் கூட்டு முயற்சியில் இந்த அழகிய மலர் புடவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இந்திய கலாச்சாரம் மற்றும் கைவினை கலைஞர்களின் திறனை பிரதிபலிப்பதாக உள்ளது.

ஆலியா பட் அணிந்திருந்த இந்த சப்யசாச்சி மலர் புடவை, பலரையும் வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், அவரின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.