'இசைஞானி' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் இளையராஜா. தற்போது ராஜ்சபா எம்பி.,யாக நியமனமாகி உள்ளார்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
1976ல் 'அன்னக்கிளி' பட வாய்ப்பை பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசை அமைத்தார்..
1993ல் லண்டனில் 'சிம்பொனி' இசையமைத்தார். அங்கு இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என அழைப்பர். ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசையை அமைத்தார்.
ஒரு பாடலை உருவாக்க அவருக்கு வெளிநாடு அவசியம் இல்லை. 'தென்றல் வந்து தீண்டும்போது' பாடலை அரைமணி நேரத்தில் உருவாக்கினார்.
இளையராஜா தன் சொந்தக் குரலில் 400 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
இவர் இசையமைத்த 100வது படம் 'மூடுபனி'. 500வது படம் 'அஞ்சலி'. 700வது படம் 'எஜமான்'. 1000மாவது படம் தாரை தப்பட்டை.
தமிழில் உச்ச நட்சத்திரங்களின் 100-வது படங்கள் இளையராஜா இசையமைப்பில் உருவானவை. 1980களில் ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்தார்.
பாரதிராஜா, கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, மணிரத்தினம், பாசில், கே.விஸ்வநாத், சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன் உட்பட பல இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.
2018ல் பத்ம விபூஷன், 2010ல் பத்மபூஷன், ஐந்து முறை தேசிய விருது, ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.