துவங்கியது அமர்நாத் யாத்திரை... ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் !
இமயமலை அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது.
பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று துவங்கியது.
ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் சிவ பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை துவங்கி வைத்தார்.
ஹர ஹர மகாதேவா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சென்றனர்.
ஆக., 31ம் தேதி வரை மொத்தம் 62 நாட்களுக்கு யாத்திரை நடக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.