இன்று இன்டர்நெட் பாதுகாப்பு தினம்
ஆண்டுதோறும் பிப்., இரண்டாம் வாரம் இரண்டாம் நாள் பாதுகாப்பான இணைய தினமாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், நடப்பாண்டில் பிப்.,6 அன்று இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தன்று, தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பல விழிப்புணர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
நவீன காலத்தில் மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் விளைவாக, அது சார்ந்த குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இணைய மோசடிகளை எவ்வாறு கண்டறிந்து அதிலிருந்து விலகி இருப்பது போன்றவற்றையெல்லாம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஆண்டு தோறும் இணையதளத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை என்ற இரண்டு கருத்துகளையுமே விவாதிக்கும் தளமாக இந்நாள் விளங்குகிறது.
குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் இணையத்தை பாதுகாப்பாகவும், நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.