சுற்றுலா செல்வதை விருப்பமாக வைத்திருக்கும் நபர்கள் கட்டாயமாக செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று கேரளா.

ஆசியாவின் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தனிச்சிறப்பான புவியியல் அம்சங்களுடன் உள்ளது.

அழகிய நீண்ட கடற்கரைகள், பசுமைப் போர்த்திய மலைவாழிடங்கள் என பல்வேறு இடங்கள் உங்களை மிகவும் கவரும் வகையில் இங்குள்ளன.

கேரளாவின் சுற்றுலா தலங்களில் முதலிடத்தில் உள்ளது ஆலப்புழா படகு வீடு தான்.

கேரளாவின் அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்று மூணாறு தான். இங்கு சுமார் 80,000 மைல் தேயிலைத் தோட்டம் உள்ளது.

வயநாட்டிலுள்ள மரவீட்டில் தங்கும் அனுபவம் புதுமையாக இருக்கும்.

திருச்சூரில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், கலாச்சார மையங்கள், தேவாலயங்கள் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இங்கு பூரம் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இயற்கையையும் வரலாற்றையும் ஆராய விரும்புவோருக்கு மிகச் சிறப்பான ஒரு சொர்க்கமாக விளங்கும் இந்த கோழிக்கோடு.