இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என திருவள்ளுவர் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கான உரிமைகளை குறிப்பிட்டு பிறப்பினால் வேறுபடுத்தல் கூடாது என்றார்.
மனிதர்கள் அனைவருக்கும் மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்வதே மனித உரிமை தினத்தின் நோக்கம்.
மனித உரிமைகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு பன்னாட்டு மனித உரிமைகள் சாசனத்தின் பதில் சம உரிமையும், சுதந்திரமும் பிறக்கும் போதே உடன் பிறக்கின்றன.
ஐ.நா., சபையால் 1948 டிச., 10 ல் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஏற்று கொள்ளப்பட்டது.
நம் மனித உரிமைகளை பாதுகாக்க போராடும் அதே வேளை மற்றவர்களின் மனித உரிமைகளையும் மீறாமல் இருக்க வேண்டியது கடமையாகும்.
மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வையும், மனித உரிமை பண்பையும் நம்மிடையே வளர்த்தெடுப்போம். மக்களின் மனித உரிமைகள் அனைவராலும் போற்றி பாதுகாப்போம்.