நோய்கள் தீர்க்கும் நீர்... ஆய்வுகள் கூறுவதென்ன?
நம் உடலுக்கு எவ்வாறு உணவு முக்கியமோ, அதுபோல தண்ணீரும் முக்கியமானது.
போதியளவு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என அமெரிக்க கலிபோர்னியா பல்கலை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலில் அதீத உடல் எடை கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தொடர்ந்து 12 வாரங்கள், சாப்பிடும் முன் 1.5 லிட்., தண்ணீர் குடிக்க, ஆறே மாதங்களில் அவர்களின் எடை குறைந்தது.
அடுத்து, டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், காலை, இரவு உணவுக்கு முன்பாக 250 மி.லி தண்ணீரும், மதிய உணவுக்கு முன் அரை லிட்., தண்ணீரும் பருகினர்.
8 வார முடிவில் இவர்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மைக்ரேன் மற்றும் கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 1.5 லிட்., கூடுதலாக பருகியதால், 3 மாதம் கழித்து அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் தலைவலி குறைந்திருப்பது தெரிய வந்தது.
சிறுநீரகக் குழாய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும், 1.5 லிட்., நீரைக் கூடுதலாக பருகியதில், 12 மாதங்களில் மருந்தின்றி குணமடைந்தனர்.
25 - 50 வயதுக்குட்பட்ட ஏற்கனவே சிறுநீரகக் கல் ஏற்பட்டவர்கள், குடிக்கும் தண்ணீருடன், 2 லிட்., தண்ணீரைக் கூடுதலாகக் குடித்துவர, 5 ஆண்டுகளில் கல் உருவாவது முற்றிலும் நின்றது.