இந்த சம்மருக்கு செல்ல தென் மாநிலத்தின் சில மலைவாசஸ்தலங்கள்!

தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஊட்டி பலருக்கும் பிடித்தமான மலைவாசஸ்தலம். அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளி, தேயிலை தோட்டங்கள், மலை ரயில் என வெகுவாக ஈர்க்கிறது.

மூடுபனி நிறைந்த மலைகள் மற்றும் பசுமையான மழைக்காடுகளால் பார்வையாளர்களை ஈர்க்கிறது கேரளாவின் வயநாடு. செம்ப்ரா சிகரம், பழங்கால எடக்கல் குகைகள் பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளன.

கர்நாடகாவிலுள்ள கூர்க் இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது. காபி தோட்டங்கள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள் என சுற்றுலாபிரியர்களை வரவேற்கிறது.

குன்னூர், தமிழகம்... அழகிய தேயிலை தோட்டங்களுடன் அமைதியான சூழலை அளிக்கிறது. நீலகிரி மலை ரயிலில் பயணிக்கும் போது மலைகளின் அழகில் மெய்மறக்கலாம்.

வாகமன், கேரளா... அழகிய புல்வெளிகள், பைன் மரக் காடுகள் மற்றும் மூடுபனி படர்ந்த மலைகள் என வாகமன் சுற்றுலாப் பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது.

ஊட்டிக்கு அருகிலுள்ள கோத்தகிரி பழமையான மலை வாசஸ்தலமாகும். அழகிய தேயிலை தோட்டங்கள், மூடுபனி மூடிய தொட்டபெட்டா மலைத்தொடர், பள்ளத்தாக்குகள் என இயற்கைப் பிரியர்களை கவர்கிறது.

தமிழகத்திலுள்ள ஏற்காடு அமைதியை விரும்புபவர்களின் புகலிடமாக உள்ளது

மூணாறு, கேரளா... மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இந்த பிரபலமான மலைவாசஸ்தலம். இங்கு நீலக்குறிஞ்சி பூக்களை கண்டு ரசிக்கலாம்.

அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் என இதமான வானிலை அழகுடன் கொடைக்கானல் உற்சாகமாக வரவேற்கிறது.