வாய்மையே வெல்லும்... காந்திஜி பொன்மொழிகள்!!
ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதி வந்தால், விலை மதிப்பில்லாத காலத்தை வீணாக்கும் எண்ணம் மறைந்து விடும்.
உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள்.
பல சமயத்தில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போதெல்லாம் நம்பிக்கையே துணை நிற்கிறது.
அன்பை விடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. அதுவே அனைவரையும் வெல்லும் சக்தி படைத்தது.
தன்னலம் இல்லாமல் வாழ்வதே ஒழுக்கமாகும். கோழைகளால் அதைப் பின்பற்ற இயலாது.
பலம் என்பது உடலின் ஆற்றல் மட்டுமன்று. அசையாத மன உறுதியே உண்மையான பலம்.
ரகசியமாகச் செய்யும் அனைத்துமே பாவம் தான். கடவுளின் கண்ணில் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது.