தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது? மீட்பது எப்படி?

தற்கொலை எண்ணம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு முறையாவது தோன்றும். எப்போதாவது தோன்றினால் அது தானாகவே சரியாகிவிடும்.

நமது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் இந்த எண்ணங்கள் வரக்கூடும்.

மனநல பிரச்னை, போதைக்கு அடிமையாதல், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, உடல் மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் தற்கொலை எண்ணம் எழும்.

மேலும், குணப்படுத்த முடியாத நோய், குடும்ப வரலாற்றில் தற்கொலை நிகழ்வு, அதிக அவமானங்களை சந்தித்தல் போன்றவற்றாலும் தற்கொலை எண்ணம் உண்டாகக்கூடும்.

இதுபோன்ற சூழலில் அவர்களை மீட்பதற்கு அன்பாக பழக வேண்டும்; தனிமையில் இருக்க அனுமதிக்கக்கூடாது.

வீட்டிலுள்ள கத்தி போன்ற ஆயுதங்கள், மருந்து போன்றவற்றை அவர்களின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட நபரின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.