கோடையிலும் சில்லென்று பனிப்பொழிவு உள்ள சில இடங்கள் !
சிக்கிமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யும்தாங் பள்ளத்தாக்கு, இந்தியாவில் கோடைக் காலங்களிலும் பனிப்பொழிவு உள்ள அழகிய இடங்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதுமே இங்கு பனியை காணலாம்.
இமயமலை மலைகள், அதன் பின்னணியில் உயரமான பைன் காடுகளுடன் மெல்லிய பனியால் மூடப்பட்டிருப்பதால், சில்லென்ற அனுபவத்தை அளிக்கிறது காஷ்மீரில் உள்ள பஹல்காம்.
லடாக்கின் நுழைவாயில் என அழைக்கப்படும் டிராஸ், கார்கில் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம். சைபீரியாவுக்கு அடுத்தபடியாக உலகில் மக்கள் வசிக்கும் இரண்டாவது மிகவும் குளிரான இடமாக டிராஸ் உள்ளது.
கோடையில் பனிப்பொழிவை ரசிக்கும் வகையில் முன்னணி சுற்றுலாத் தலமாக லே உள்ளது. கோடைக்காலம் இங்கு விசிட் செய்ய சிறந்த நேரமாகும்.
இமயமலைச் சிகரங்களின் பின்னணியில், அழகாக விரிந்துள்ள குல்மார்க் பனிப்பொழிவை ரசிக்கக்கூடிய சிறந்த இடமாகும். குறிப்பாக, அமைதியான ஏரிகளில் படகு சவாரி செய்வது ரொமான்டிக்காக இருக்கும்.
பித்தோராகர் மாவட்டத்தில் 7,200 அடி உயரத்தில், இமயமலையின் பனி மூடிய மலைகளில் முன்சியாரி அமைந்துள்ளது. கோரிகங்கா ஆற்றின் கரையில் பனி படர்ந்த சிகரங்களால் சூழப்பட்டுள்ளதால், வெப்பமே தெரியாது.
கோடையில் செல்ல வேண்டிய பனிப்பிரதேசங்களில் சிக்கிமில் உள்ள ஜூலுக் ஒன்று. இந்த அமைதியான கிராமத்தில், கஞ்சன் ஜங்கா உட்பட இமயமலையின் கிழக்கு பக்க மலைகளின் மயக்கும் காட்சிகளை காணலாம்.
மிகவும் பிரபலமான உயரமான மலைப்பாதைகளில் ஒன்றான ரோஹ்தாங் பாஸ், பிர் பஞ்சால் மலைத்தொடரில் 13,050 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பனியில் உற்சாகமாக விளையாடி குளிர்ச்சியாக மகிழலாம்.