நாளை தை அமாவாசை முன்னோர்கள் வழிபாடு செய்யலாம்!

வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகள் வருகின்றன. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை.

இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்கலாம்.

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

தை அமாவாசை அன்று தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும்.

நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம்.

ராமேஸ்வரம், திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர், என்று தமிழகமெங்கும் பல்வேறு திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.

இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலிருக்கும் நீர் நிலைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டைச் செய்து பயன் பெறலாம்.

முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்படும் அமாவாசை நாளில் விரதம் இருந்து, அவர்களை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி, வாழ்வில் அமைதி, செல்வம் ஆகியன கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.