உலகம் எல்லாம் கொண்டாடப்படும் புத்தாண்டு!

புவி அமைப்பின் படி, உலகில் புத்தாண்டை முதலில் வரவேற்பவர்கள், நியூசிலாந்து நாட்டு மக்கள் தான். மற்ற நாடுகள் அதன் பிறகே, நேரத்தை பொறுத்து கொண்டாடுகின்றன.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தை வணங்கி, புத்தாண்டை வரவேற்று, பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்கின்றனர்.

ஸ்பெயின்: டிசம்பர் 31ம் தேதி இரவு, 12 திராட்சைகளை, கடிகாரத்தில், 12:00 மணி அடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்து, புத்தாண்டை வரவேற்பர்.

ஒரு மாதத்துக்கு புத்தாண்டை கொண்டாடுகின்றனர், சீன மக்கள். ஆண்டில் கடைசி மாத பிற்பகுதியில் துவங்கி, ஆண்டின் முதல் மாத முன்பகுதி வரை, ஒரு மாதம் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

ஜப்பான்: புத்தாண்டு நாளில், வைக்கோலால் செய்த கயிறுகளை, வீட்டின் முன்புறம் தொங்க விடுகின்றனர். இதனால், கெடுதல்கள் நீங்கி, நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

பிரேசில்: அனைத்து இடங்களிலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க, ரியோடிஜெனிரோவில் உள்ள பூங்காவில் எல்லாரும் கூடி, வாண வேடிக்கையுடன், வெள்ளை ஆடை அணிந்து புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர்.

ரோமானியர்கள் புது ஆண்டு பிறந்தவுடன் கருமையான, உயரமான மனிதரைப் பார்த்தால், அந்த ஆண்டு தங்களுக்கு அதிர்ஷ்டம் என்று நம்புகின்றனர்.

இத்தாலி : தலைநகர் ரோமில், 40 நாட்கள் விரதமிருந்து பிறகே, ஜனவரி 1ம் தேதியைக் கொண்டாடி மகிழ்வர்.