கலர்களோடு ஹோலி பண்டிகை! கறைகளை நீக்க டிப்ஸ்!
ஹோலி கொண்டாட்டத்தில் வண்ண கலர் பொடிகளை தலை முதல் பாதம் வரை பூசி மகிழ்வோம்.
முதலில் வண்ணங்களை வாங்கும் போது, இயற்கை மற்றும் லைட் கலராக வாங்கவும். ரசாயன வண்ணங்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்தி எரிச்சலை ஏற்படுத்தும்
விளையாடிவிட்டு குளிப்பதற்கு முன் உங்கள் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் கொண்டு தேய்த்தால் எளிதில் நிறங்கள் நீங்கும்.
கறை படிந்த பகுதிகளில் எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து சில வினாடிகள் ஊறவைத்த பிறகு தண்ணீர் ஊற்றி கழுவவும்.
ஒரு கப் தயிரில் 3 ஸ்பூன் தேன் சேர்த்து சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவினால் சருமம் பளிச்சென இருக்கும்.
சருமத்தில் நிறம் உள்ள பகுதியில் சோப் போட்டு கொஞ்சம் நேரம் ஊறவைத்து கழுவவும். ஆனால் ஸ்க்ரப்பர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது சருமத்தை சேதமடைய செய்யும்.
அதிக சூடான நீரை பயன்படுத்தினால் உங்கள் சருமம் எரிச்சல் ஆகலாம் அதனால் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
நீங்கள் பயன்படுத்திய ஆடையை துவைக்கும் முன் சுமார் இரண்டு மணி நேரம் வினிகரில் ஊறவைக்கவும். பின் துவைத்தால் வண்ணங்கள் நீங்கிவிடும்.