சாட்ஜிபிடிக்கு போட்டியாக இந்தியாவுக்கு வந்தது கூகுளின் செயற்கை நுண்ணறிவு - எப்படி பயன்படுத்துவது?
சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுளின் பார்ட் (Bard), இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தனர்.
சாட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்பத்தை ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.
கடிதம் எழுதுவது, மீட்டிங்கிற்கு குறிப்பு எடுக்க உதவுவது, மெயில் தயாரிப்பு, கட்டுரை எழுதுவது, மொழி பெயர்ப்பது போன்றவற்றை செய்யும்.
பார்ட் தொடர்ந்து விரைவாக மேம்படுத்தப்பட்டு புதிய திறன்களைக் கற்று வருகிறது.
பார்ட், பெரிய அளவிலான டேட்டாக்களை வழங்கி இதனை பயிற்வித்துள்ளனர்.
கூகுள் கணக்கு மூலம் இதனைப் பயன்படுத்தலாம். bard.google.com என்ற தளத்திற்கு சென்று உங்களின் ஜிமெயில் ஐடி கொண்டு உள்நுழைய வேண்டும்.
பின்னர் அதன் கீழே 'என்டர் ஏ ப்ராம்ப்ட் ஹியர்' என்ற டேப் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம்.