டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் உண்டா?
ஒவ்வொரு வங்கியும், ஏ.டி.எம்.,மில் பயன்படுத்தும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பல்வேறு விதமான காப்பீடுகளை வழங்குகிறது.
பொதுவாக, டெபிட் கார்டு தொலைந்து போனாலோ, திருடு போனாலோ, அதை உடனடியாக வங்கிக்கு தெரிவித்தால், அதன் பிறகு அந்த அட்டையில் நடைபெறும் எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் அவர் பொறுப்பல்ல.
விபத்து காப்பீடும் உண்டு. உங்களுடைய கார்டின் வகைக்கு ஏற்ப, ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம்.
தொடர்ச்சியாக விமானப் பயணம் மேற்கொள்கிறவர்களுக்கு, விமான விபத்து காப்பீடு கொடுக்கப்படுகிறது.
டெபிட் கார்டு வாயிலாக வாங்கப்படும் பொருட்கள் சேதமுற்றாலோ, தொலைந்து போனாலோ, அதற்கும் காப்பீடு உண்டு.
பயணத்தின் போது பெட்டிகள் தொலைந்து போனால், அதற்கும் காப்பீடு உண்டு. டெபிட் கார்டு கொடுக்கும் ஒவ்வொரு வங்கியும், இவற்றில் பல அம்சங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இதில், பல உள் விதிமுறைகளும், வரையறைகளும் உள்ளன. உங்கள் வங்கி என்ன தருகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.