ஒரு முழு ரயிலையும் முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?
குழுவாக ஒரு உல்லாச சுற்றுலா, திருமணத்துக்கு செல்லணுமா? இதற்கு முழு ரயில் அல்லது முழு கோச்சை முன்பதிவு செய்யலாம்.
https://www.ftr.irctc.co.in/ftr என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று பயண தேதி, கோச் வகை போன்றவற்றை தேர்ந்தெடுத்து, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தலாம்.
ஏசி வகுப்பு, ஸ்லீப்பர் என எந்த வகை கோச்சையும் தேர்ந்தெடுக்கலாம்; குறைந்தபட்சம் 500 கி.மீ., தூரத்துக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ஒரு பெட்டிக்கு ரூ. 50,000 அல்லது முழு ரயிலையும் முன்பதிவு செய்ய ரூ.9 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.
இதுதவிர கோச்சில் பயணிக்கு என்ன கட்டணமோ அது வசூலிக்கப்படும். கூடுதலாக பயணிகளை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படும்.
பயணத்திற்கு 30 - 180 நாட்கள் முன்னதாக முன்பதிவு செய்யலாம். பயணம் ஒத்திவைக்கப்பட்டால் ஒரு முறை தேதியை மாற்றிக்கொள்ளலாம்.
முன்பதிவை ரத்தும் செய்யலாம். பயணத்துக்கு பிறகு பாதுகாப்பு வைப்புத் தொகை திருப்பிச் செலுத்தப்படும்.