ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட் நிறங்களுக்கும் உள்ள வெவ்வேறு அர்த்தங்கள்.
நம் நாட்டிலிருந்து, வேறு நாடுகளுக்குச் சென்று வர பாஸ்போர்ட் தேவை என்பது அனைவரும் அறிந்ததே.
பாஸ்போர்ட்கள் நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு போன்ற பல வண்ணங்களில் இருக்கின்றன.
பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தான் International Civil Aviation Organization (ICAO) விதிமுறைகள் விதிக்கின்றன.
பாஸ்போர்ட் நிறங்களை அந்தந்த நாடுகளே நிர்ணயிக்கின்றன.
பாஸ்போர்ட்டின் நிறம் ஒரு நாட்டின் அரசியல், மத, வரலாற்று, மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் பச்சை நிற பாஸ்போர்ட்டுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
உலகில் பெரும்பாலும் உபயோகிக்கப்படும் பாஸ்போர்ட்டுகள் சிவப்பு நிறம், கிறிஸ்தவ மதத்தை குறிப்பிடுவதாகும்.
நீல நிற பாஸ்போர்ட்டுகள், இது, 'ஒரு புதிய உலகு' என்ற பொருளைக் குறிக்கிறது.
கருப்பு நிற பாஸ்போர்ட்டுகள், மலாவி, டஜ்கஸ்தான் குடியரசு, போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
இந்தியாவில், ஆரஞ்சு, வெள்ளை, மற்றும் கருஞ்சிவப்பு நிற பாஸ்போர்ட்டுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.