இன்று கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்!

உழைத்து வாழ்வதில்தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.

அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அதுவே உலக இயக்கத்தின் ஆதாரம்.

பிறருக்கு துன்பம் தருவது பாவம். இதுவே இன்பத்தைக் கொடுத்தால் புண்ணியம்.

உண்மையை உயிராக போற்று. உண்மை பேசுபவர்கள் உயர்வாக மதிக்கப்படுவர்.

மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. தண்டனைக்கு ஆளாவாய்.

துணிவு இருந்தால் துன்பம் அணுகாது. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெறலாம்.

படிப்படியான வளர்ச்சியே நிலைக்கும். வேகமான வளர்ச்சி வந்த வேகத்தில் படுத்து விடும்.

உன்னை நீயே திருத்திக் கொண்டு உண்மையின் பாதையில் செல்.