இந்தியாவில் வெளிநாடுகளுக்கு இணையாக உள்ள அழகிய இடங்கள் சில !
நயாகராவின் 176 அடியுடன் ஒப்பிடும்போது, சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள சித்ரகோட் நீர்வீழ்ச்சியில் , 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது; 1000 அடி அகலமும் உள்ளதால், கண்கொள்ளா காட்சியாகும்.
அழகிய ஏரிகள், இயற்கை எழில் கொஞ்சும் கால்வாய்களின் தாயகமான இத்தாலியிலுள்ள வெனிஸ்க்கு மாற்றாக, கேரளாவிலுள்ள ஆலப்புழா உள்ளது. இங்கு படகு வீட்டில் செல்லும் போது நேரம் போவதே தெரியாது.
அந்தமான், நிக்கோபார் தீவுகள் தாய்லாந்தில் உள்ள ஃபை ஃபை தீவுகளை பல வழிகளில் ஒத்திருக்கின்றன. அழகிய வெள்ளை மணல் பிரதிபளிக்கும் நீல நிற தண்ணீர் என மாயை உலகுக்கு அழைத்துச் செல்கிறது.
பட்ஜெட் செலவுக்குள் சுவிட்சர்லாந்து சென்ற அனுபவத்தை பெற ஹிமாச்சலபிரதேசம், சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான கஜ்ஜியாருக்கு விசிட் செய்யலாம்.
'குடகு' என்ற கூர்க் முடிவில்லாத, பசுமையான நிலப்பரப்புக்காக இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது. காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த மலைப்பகுதி வெகுவாக ஈர்க்கிறது.
வெப்பமான தார் பாலைவனத்தின் அழகு, உலகளவில் பிரபலமான ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்தை ஒத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.