இன்று மே 1 உழைப்பாளர் தினம் !
ஆண்டுதோறும் மே 1ல் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இது மே தினம், சர்வதேச தொழிலாளர் தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்க இந்த நாள் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதுடன், உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கற்பிப்பதுடன், அதிகார வர்க்கத்தினரின் சுரண்டல்களில் இருந்து காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 1917ல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு பிளாக் நாடுகளால் தொழிலாளர் தின கொண்டாட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல நாடுகளில் மே 1 தேசிய விடுமுறையாக மாறியது. அணிவகுப்புகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 1923ல் தான் முதன்முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதி சிங்கார வேலர்தான் முதன் முதலில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் முன்னிலைப்படுத்த பல நிகழ்வுகளும் ,கருத்தரங்குகளும் இந்நாளில் நடத்தப்படுகின்றன.