புருவம் கருமையாக மைக்ரோபிளேடிங் லேட்டஸ்ட் தேர்வு!
புருவம் குறைவாக இருக்கும், நவீன பெண்களின் லேட்டஸ்ட் தேர்வு, 'மைக்ரோபிளேடிங்'.
'செமி- பெர்மனென்ட் ஐப்ரோ டாட்டூயிங்' எனும் நவீன முறை பச்சைக்குத்துதான், மைக்ரோபிளேடிங்.
இதில் சிறிய கையடக்க கருவியின் உதவியுடன், தோலில் மெல்லிய கீறல்கள் செய்யப்படுகின்றன.
அந்த இடங்களில் நிறமிகள் (பிக்மென்ட்) செலுத்தப்படுவதால், புருவங்களுக்கு அடர்த்தியும், அழகான வடிவமும் கிடைக்கின்றன.
புருவங்களில் முடி குறைவாக உள்ளவர்களுக்கும், மெல்லிய புருவங்களை கொண்டவர்களுக்கும் இது நல்ல தேர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயற்கையான, அடர்த்தியான புருவத் தோற்றம் பெற, இது ஒரு சிறந்த வழி. ஆனால், இது நிரந்தரமல்ல; சில மாதங்களில் மறைந்துவிடும்.
இந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கருவி, தோலை கீறும் இயல்புடையதாக இருப்பதால், தோல் பாதிக்கப்படலாம்.
எனவே, நல்ல 'டெர்மடாலஜிஸ்ட்' ஆலோசனைப்படி, இதற்கென சான்றிதழ் பெற்ற நிபுணரை அணுகுவது சிறந்தது.