ஆரோக்கியமான உணவுக்கு பிரிஜ் பராமரிப்பு அவசியம்!
சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைப்பர். இது தவறு.
அதேபோல, பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை பிரிஜ் உள்ளே வைப்பதை தவிர்த்து, தரமான பிளாஸ்டி டப்பாக்களை பயன்படுத்தலாம்
காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அவை அழுகிவிடக் கூடும்.
இதைத் தவிர்க்க அவற்றை, 'நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம்
சூடான பொருட்களை பிரிஜ்ஜினுள் வைக்கக் கூடாது. அவற்றின் வெப்பநிலை, பிரிஜ் முழுவதும் பரவி, உள்ளே சூட்டை அதிகரித்துவிடும்.
இதனால், மின் செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போக கூடும்
பிரிஜ் கதவை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும்.