சிட்ரான் சி3-ல் நான்கு புது வேரியன்ட்கள் அறிமுகம்!
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி3 ஹேச்பேக் (Citroen C3) மாடலின் புதிய வேரியன்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிட்ரோயன் நிறுவனம், சி5, சி3 என இருமாடல்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
சி3 சீரிஸ்க்கு போதிய வரவேற்பு கிடைத்த நிலையில், அதில் ஷைன் எனும் புதிய சீரிஸை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிட்ரோயன் சி3 புதிதாக ஷைன் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஷைன் (Shine), ஷைன் வைப்-பேக், (Shine Vibe Pack) ஷைன் டூயல்-டோன் (Shine Dual Tone) மற்றும் ஷைன் டூயல் டோன் (Shine Dual Tone Vibe Pack).
சி3 ஹேச்பேக் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
சிட்ரோன் சி3 ஷைன் வேரியண்டில் மை சிட்ரோன் இணைப்பு ஆப் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.