ஏப்ரல் 29 : உலக நடன தினம்

உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

முதல் சர்வதேச நடன தினம் 1982ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

யுனெஸ்கோவின் கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கிய கூட்டாளியான சர்வதேச நாடக நிறுவனத்தின் (ITI) நடனக் குழுவால் இத்தினம் உருவாக்கப்பட்டது.

நவீன பாலேவை உருவாக்கிய ஜீன் ஜார்ஜஸ் நோவர்ரே (1727-1810) பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 29 அன்று கொண்டாடப்படுகிறது.

நடனத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் மக்களை ஒன்றிணைக்கவும் இந்த நாளின் நோக்கம்.

மேலும் நடன பயிற்சி பட்டறைகள், நடன விழாக்கம், நடனம் குறித்த பேச்சு மற்றும் மற்ற நடவடிக்கைகள் என இந்த நாளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதேசமயம் நடனம் மற்றும் அதன் கலாச்சாரம், முக்கியத்துவம் குறித்து உலகிற்கு வெளிப்படுத்த உதவும்கிறது.

முக்கியமாக நடனம் உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகச் செயல்படுவதோடு, நீங்கள் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும் என்பதில் ஐய்யமில்லை.