முகம்மது நபி குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் வகையில் ரமலான் நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் ரமலானுக்கு முன்பு இவர்கள் 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். நோன்பு தினம் முடிகிற அன்று ரமலான் கொண்டாடப்படுகிறது.
மனிதர்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யார் தெரியுமா... தம் பாவங்களுக்காக மனம் வருந்தி திருந்துபவர்களே. - குரான்
எல்லோரிடமும் நல்லவர்களாக இருங்கள். மறுமைநாளில் அது பயன் தரும்.
இருள் சூழ்ந்த நேரத்தில் கூட இறை இல்லம் நோக்கி நடந்து செல்பவர்களுக்கு மறுமைநாளில் நிறைவான ஒளி கிடைக்கும்.
இடதுகைக்கு கூட தெரியாமல் தர்மம் செய்பவருக்கு மறுமை நாளில் இறைவன் இனிய நிழலை வழங்குவான்.
ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியும்.
பிறருக்கு தீங்கு செய்யாதீர்கள். உடலை விட்டு உயிர் பிரியும்போது இவ்வுலகக் கண் மூடி மறுமையில் கண் திறந்துவிடும்.