இந்த இலையுதிர் காலத்தில் ரசிக்க சில மலைவாசஸ்தலங்கள் !
சிம்லா... இமயமலையின் அழகிய காட்சிகள் மட்டுமின்றி இங்குள்ள கட்டடக்கலையும் சுற்றுலாப் பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது.
மணாலி... பனி மூடிய சிகரங்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் சாகச விளையாட்டுகள் பார்ப்போருக்கு இயற்கை விருந்தளிக்கிறது.
காபி தோட்டங்கள், அழகிய காட்சிகள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது கர்நாடகாவிலுள்ள கூர்க். குடகு எனவும் அழைக்கப்படுகிறது.
ஊட்டி... அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளி, வருடிச்செல்லும் காற்று, வெண் மேகக்கூட்டங்கள் என உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் குளிர்ச்சி ஊட்டுகிறது.
மூச்சடைக்கக்கூடிய அழகு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் அழகிய தேயிலை தோட்டங்களுக்கு பெயர் போனது டார்ஜிலிங். நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து சிறிது விலகி ரிலாக்ஸாக இருக்கலாம்.
கொடைக்கானல்... அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள், பூக்களின் இதழ்களில் பனித்துளி என இதமான வானிலை அழகுடன் கொடைக்கானல் உற்சாகமாக வரவேற்கும்.
லடாக்... இங்கு கொட்டிக் குவிந்துள்ள இயற்கை காட்சிகளுடன் சாகச வாய்ப்புகளும் நிறைந்துள்ளதால் இளசுகளின் ஃபேவரைட் இடமாக உள்ளது.
மூணாறு... மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த பிரபலமான மலைவாசஸ்தலம் தேனிலவு சுற்றுலாவுக்கு பிரபலமானது.