நிலநடுக்கத்தை முன்னரே கணிக்கும் விலங்குகளும் பின் இருக்கும் அறிவியல் காரணங்ளும்!
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னரே விலங்குகளால் அதனை உணர முடியும் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது.
சென்ற வாரம் சிரியா துருக்கி நிலநடுக்கத்தில் வெளிவந்த வீடியோ பதிவுகளில், நாய்கள் குறைப்பதும் பறவைகள் அங்கும் இங்குமாக அலைமோதுவதும் பதிவாகி இருந்தன.
கிமு 373களிலும் பாம்புகள் எலிகள் மற்றும் பூச்சிகள், நிலநடுக்கத்தின் போது எவ்வாறு நடந்துக் கொண்டன என்று ரோமைச் சார்ந்த ஒரு எழுத்தாளர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
2016ல் ஆயிரக்கணக்கான பறவைகள் சீனாவின் ஒரு பகுதியில் நிலநடக்கத்திற்கு முன் எவ்வாறு அலை மோதிக் கொண்டு பறந்தன என்று குறிப்பிட்டு இருந்தனர்.
நிலநடுக்கத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் முதல் நிலை அலை இரண்டாம் நிலை அலை என இரண்டாக பிரிந்து வரும்.
இதில் முதல் நிலை அலையானது, மிகக் குறைந்த அதிர்வலைகள் கொண்டதாக இருப்பதால் அது விலங்கினங்களின் காதுகளுக்கு எளிதாக எட்டி அவை நிலநடுக்கத்தை கணித்து விடுகின்றன.
பின்பு, அதிக அதிர்வலைகள் கொண்ட இரண்டாவது அலையே நம் காதுகளுக்கு கேட்கின்றன. இது 2018ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரிய வந்தது.