தை அமாவாசை; வீட்டில் குலதெய்வத்தை வழிபட குடும்பம் செழிக்கும் !

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது.

இருப்பினும், உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு.

இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்யலாம்.

தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம், முக்கொம்பு உட்பட பல தலங்கள் பிதுர் பூஜைக்குரியவையாக உள்ளன.

வட மாநிலங்களில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும், எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அதில், காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட முன்னோர்களின் ஆசி கிடைக்கும்;நல்லதே நடக்கும்.