பயணங்கள் சுவாரஸ்யமானவை... உலக சுற்றுலா தினம் இன்று !

வாழ்க்கையில் பயணங்கள் சுவாரஸ்யமானவை. அதிலும் சுற்றுலா என்றாலே மகிழ்ச்சிக்குரியது.

நாட்டின் பொருளாதாரத்திலும் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் மொத்த ஜி.டி.பி., யில் இதன் பங்கு 10%.

உலகில் பத்தில் ஒருவருக்கு இத்துறை வேலை அளிக்கிறது.

இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார பெருமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது.

இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப். 27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

'சுற்றுலா, நிலையான மாற்றம்' என்பது இந்தாண்டு மையக்கருத்தாகும்.

மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகும், பல்வேறு கலாசார உண்மைகளும் காட்சியாக்கப்படுவது நம்முடைய பயணங்களில்தான்.

பயணிப்பதன் நோக்கம் பொழுது போக்குவதற்கல்ல, அறிவை விசாலமாக்குவதற்கும், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் மூளையின் அயர்வைப் போக்குவதற்குமேயாகும்.

பலரின் பயண அனுபவங்கள் மிகச்சிறந்த வாழ்க்கைப்பாடங்களாக மாறியுள்ளன. சொகுசான சூழலைத்தாண்டி அனைத்து சூழலிலும் வாழ முடியும் என்ற புரிதலை பயணம் தரும்.

எனவே, உங்களின் பயணங்கள் தொடரட்டும்.