மது பழக்கத்தை விட வேண்டுமா? வழிகள் உண்டு பூமியில்…
மதுவிற்கு அடிமையாவது என்பது மூளை சார்ந்த ஒரு நோய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுக்கு அடிமையானவர்கள் அந்த பழக்கத்திலிருந்து மீள்வது கடுமையான சவால் என்றே கூறலாம்.
அதிலிருந்து மீள முயலும்போது ஏற்படும் பக்க விளைவுகளை 'ஆல்கஹால் வித்ட்ராயல் சின்ட்ரோம்' என அழைக்கப்படுகிறது. மது பழக்கத்தை விட்டு ஒழிக்க சில யோசனைகள் இதோ…
திடீரென குடிப்பழக்கத்தை நிறுத்தும்போது அது உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் முதலில் மருத்துவ உதவியை நாட வேண்டும். குறிப்பாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அல்லது நிபுணர்களிடம் கவுன்சலிங் பெறலாம்.
மீண்டும் குடி பழக்கதிற்கு உதவும் நட்பு வட்டத்துக்கு டாட்டா சொல்லிவிடுங்கள். அவர்களிடமிருந்து மிகவும் தள்ளியே இருங்கள். உங்களுக்கு உதவ முன்வரும் நண்பர்கள், உறவினர்களிடம் மட்டும் பழகுங்கள்.
வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யலாம். மேலும், உங்கள் முன்னேற்றதிற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுவது மிகவும் அவசியம். தொழில், வேலை என முன்னேற்ற பாதையில் கவனம் செலுத்தவும்.
மன மாற்றதிற்காக புதிய ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். புத்தகம் படித்தல், பயணம் போன்ற ஆக்கப்பூர்வமான பொழுதுப்போக்கில் ஈடுப்படலாம்.
குடிப்பழக்கத்தால் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுப்பட்டு பழைய தோற்றத்தை பெற முயற்சிக்கவும். தியானம் உங்கள் மனவலிமையை அதிகப்படுத்தும்.
குடிப்பழக்கத்தினால் இழந்த ஆரோக்கியத்தை மீட்க சத்துள்ள, சமசீரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.