மாடர்ன் உடைகளுக்கு பாரம்பரிய நகைகள்.. இப்போ டிரெண்டிங்...!

பழமையில் புதுமையை புகுத்துவதே தற்போதைய பேஷன் உலகில் டிரெண்ட் ஆக உள்ளது.

மாடர்னாக புதிய புதிய டிசைன்களில் உடைகள் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றில் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர் இன்றைய பேஷன் டிசைனர்கள்.

நம் பாட்டி, தாத்தா காலத்து சிகையலங்காரம், உடைகள் என அனைத்துமே சில மாற்றங்களுடன் தற்போது உலா வருகிறது. அதற்கேற்ப நெக்லஸ், ஹாரம், காதணிகளும் வடிவமைக்கப்படுகின்றன.

காலர் சர்ட், பேன்ட், பிளேசர் போன்ற மாடர்ன் உடைகளுக்கும் பாரம்பரிய நகைகளை அணிவது தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் மஞ்சள் நிற பிளேஸர் மற்றும் மேட்சிங் ஆக அதே நிறத்தில் பேன்ட் அணிந்திருந்தார்.

அப்போது, அலங்கார வண்ணக்கற்கள் பதிக்கப்பட்ட பாரம்பரிய நெக்லஸ் மற்றும் காதணிகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது கீர்த்திக்கு ரிச் மற்றும் ஸ்டைலிஷான தோற்றத்தைத் தருகிறது.

அதேபோல் காலர் சட்டை மற்றும் பேன்ட் உடன் பல வண்ண ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்களால் வடிவமைக்கப்பட்ட மகாராணி நெக்லஸை, கேன்ஸ் விழாவில் தீபிகா படுகோன் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கைகளால் வரையப்பட்ட செடிகள், பூக்களின் டிஜிட்டல் பிரிண்டட் மைசூர் பட்டுச்சட்டை, கம்பளி ரக பேன்ட் இதன் சிறப்பம்சமாகும்.