மகிழ்ச்சி தரும் மலர்ச்சி! இன்று உலக மகிழ்ச்சி தினம்!

அனைவரும் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மகிழ்ச்சியாக வாழ்வது, மனித உரிமைகளில் ஒன்று என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஐநா 2012ல் உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது.

வறுமையை ஒழிப்பது, சமத்துவமின்மையைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆகியவை இதன் முதன்மை வளர்ச்சி நோக்கங்களாகும்.

'பகிர்தல் மற்றும் அக்கறை' என்பது இவ்வாண்டிற்கான மையக்கருத்து.

புன்னகை மலர்கள் பூக்கும் வேளையில் சோகங்கள் எல்லாம் சுகங்களாகும். சின்ன சின்ன மகிழ்ச்சிகளால் நிறைகிறது இந்த வாழ்வு.

மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. எனவே சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும்.

நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்.