குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க இப்படி பயிற்சி கொடுங்க…
அழகான கையெழுத்து என்பது குழந்தைகளின் வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு உதவும்.
குழந்தைகளின் கிறுக்கல் எழுத்துகளை ஒழுங்காக்க, பெற்றோர் என்னென்ன விஷயங்கள் செய்யவேண்டும் எனப் பார்ப்போமா?
குழந்தைகள் தொடர்ந்து எழுதிப் பழக பல வண்ணங்கள் கொண்ட பென்சில், பேனாக்களை வாங்கிக்கொடுப்பது நல்லது.
நீலநிற மை ஊற்றி எழுதப்படும் ஃபவுன்டென் பேனாக்கள் குழந்தைகளின் விரல்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாமல் சுலபமாக எழுத உதவும்.
நாற்காலியில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக்கி பேனாவை சரியாகப் பிடித்து எழுதப் பழக்கும்போது கிறுக்கல் குறைந்து எழுத்து அழகாகும்.
குழந்தைகள் வெளிச்சத்தில் படிக்க, எழுத வேண்டும். குறைவான வெளிச்சத்தில் படிப்பது, எழுதுவது கூடாது.
கைகள் சிறிதாக உள்ள குழந்தைகளுக்கு, பிரத்யேகமாக குழந்தைகளுக்காக விற்கப்படும் சிறிய ரக பென்சில், பேனாக்களை வாங்கிக் கொடுக்கலாம்.
இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை வலது கையில் எழுத நிர்பந்தப்படுத்துவது தவறு. இதனால் அவர்களது கையெழுத்து வெகுவாக பாதிக்கும்.
யூடியூபில் கையெழுத்தை அழகாக்க உதவும் வீடியோக்களை அவர்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போன்களில் காட்டலாம்.